ஸி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஈழத்து குயில் கில்மிசா வெற்றி வாகை சூடியுள்ளார்.
தென்னிந்திய தொலைக்காட்சியின் ஒன்றின் ரியால்டி சோ ஒன்றில் முதன்முறையாக இலங்கையை சேர்ந்த சிறுமி ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இலங்கையிலும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சரிகமப இசை நிகழ்வு மிகவும் பிரபல்யம் அடைந்திருந்தது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்நிலையில் அந்த கனவு இன்று நிஜயமாகி உள்ளது.
சரிகமப இசை போட்டி நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா உட்பட பல பாடகர்கள் பங்கேற்றிருந்தனர்.
மக்களின் வாக்களிப்பின் அடிப்படையில் கில்மிஷா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த வெற்றி அறிப்பை அடுத்து இலங்கையின் பல பகுதிகளில் பட்டாசு கொளுத்து ரகசிர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்த மலையக குயில் அசானி இறுதி போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். எனினும் உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளதுடன், கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.