- Advertisement -
- Advertisement -
அடுத்த வாரம் முதல் வெங்காயத்தின் விலை குறையும் என வெங்காய மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த சில நாட்களில் வெங்காயத்தின் விலை கணிசமாக குறையும் என மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நாட்டில் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் வெங்காயத்திற்கு பதிலாக மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
- Advertisement -