வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் தொடர்பில் இன்று (17.12) பிற்பகல் வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நில்வலா ஆற்றை அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அம்பர் எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.