Saturday, March 15, 2025

ஜனவரி முதல் அமுலுக்கு வரும் வட் வரி : நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் மக்கள்!

- Advertisement -
- Advertisement -

எரிபொருளுக்கான VAT அமுல்படுத்தப்பட்ட நாளிலிருந்து பஸ் கட்டணம், முச்சக்கர வண்டி கட்டணம், பாடசாலை போக்குவரத்து வாகன கட்டணங்கள் உட்பட அனைத்து போக்குவரத்து கட்டணங்களையும் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதல் எரிபொருள் மீதான 18% VAT அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து வர்த்தக சங்கங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருளுக்கு மேலதிகமாக, வாகன உதிரி பாகங்களுக்கு VAT அமுல்படுத்தப்படுவதால், பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என பஸ் சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளன.

தற்போதைய நிலைமைக்கு ஏற்ப குறைந்தபட்ச பஸ் கட்டணம் பத்து ரூபா அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிக்கப்படுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர் பஸ் கட்டணம் சுமார் 20% அதிகரிக்கப்பட வேண்டும் என சங்கத்தின் பொதுச் செயலாளர்  அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular