Sunday, March 9, 2025

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று (17.12) மழையுடன் கூடிய வானிலையே நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.

இதன்படி  வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது

அதேபோல் மற்ற பகுதிகளில், சுமார் 1.00 மணிக்குப் பிறகு பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை,கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular