Tuesday, March 11, 2025

வவுனியாவில் தொடர் மழையால் 22 குடும்பங்கள் பாதிப்பு!

- Advertisement -
- Advertisement -

தொடரும் மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று(16.12) அறிவித்துள்ளது.

குறிப்பாக,  மாறா இலுப்பை பகுதியில் 05 குடும்பங்களை சேர்ந்த 22 பேரும், சின்னடம்பன் பகுதியில் 09 குடும்பங்களை சேர்ந்த 35 பேரும் இடம்பெயர்ந்த நிலையில் இரு பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நைனாமடு பகுதியில் 02 குடும்பங்களை சேர்ந்த 06 பேரும், நெடுங்கேணியில் 06 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular