Saturday, March 15, 2025

பாடசாலை உபகரணங்களுக்கான விலையும் அதிகரிக்க வாய்ப்பு!

- Advertisement -
- Advertisement -

வட் வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், ஜனவரி முதல் பள்ளி உபகரணங்களின் விலை தற்போதைய விலையை விட இரு மடங்காக உயரும் என புத்தகக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் ஆண்டிற்குத் தேவையான புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்களை இவ்வருட இறுதிக்குள் கொள்வனவு செய்வது நல்லது என சுட்டிக்காட்டுகின்றனர்.

தற்போது கூட பள்ளி உபகரணங்களின் விலை கட்டுப்படியாக முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாத விலையுடன் ஒப்பிடும் போது அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் ஏற்கனவே 05 – 15 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular