Monday, March 10, 2025

இலங்கை வரும் இங்கிலாந்து இளவரசி!

- Advertisement -
- Advertisement -

இங்கிலாந்து இளவரசி அன்னே இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இளவரசி அன்னே மற்றும் அவரது பங்குதாரரான வைஸ் அட்மிரல் சர் டிம் லோரன்ஸ் ஆகியோரும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவுகளை முன்னிட்டு பல நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே இவர்கள் இலங்கை வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular