தென்னிந்திய தமிழ் நடிகை ரம்பாவின் கணவர் முதலீட்டாளர் இந்திரகுமார் பத்மநாதனின் முயற்சியினால் யாழ்ப்பாணத்தில் நொதேர்ன் யுனி தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட நொதேர்ன் யுனியில் சமய சம்பிரதாயபூர்வமாக பால் காய்ச்சி இன்றைய தினம் சாமி படம் வைக்கப்படது.
நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாக கொண்ட கனடா முதலீட்டாளராவார்.
இந்தநிலையில் நடிகர் ரம்பா குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டு நொதேர்ன் யுனியில் சமய சம்பிரதாயபூர்வ வைத்தார்.
இதேவேளை நொதேர்ன் யுனியின் அனுசரனையில் டிசம்பர் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் தென்னிந்திய பாடகர் ஹரிஹரன் பங்கேற்கவுள்ள பிரம்மாண்டமான இலவச இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.