Tuesday, March 11, 2025

தெற்கு சுவிட்சர்லாந்தில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி, ஒருவர் காயம்!

- Advertisement -
- Advertisement -

தெற்கு சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றாவது நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்கு வெகு தொலைவில் உள்ள சுமார் 35,000 மக்கள் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத ஆண் துப்பாக்கிதாரியை கைது செய்ய அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிதாரி என நம்பப்படும் 36 வயதுடைய நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் மக்கள் முன்வந்து தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் வழக்குரைஞர்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular