Saturday, March 15, 2025

வட் வரியில் இருந்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு!

- Advertisement -
- Advertisement -

வட் வரிக்கான புதிய சட்டத்திருத்தத்தின் கீழ், கோதுமை மற்றும் கோதுமை மா, குழந்தை பால் பவுடர், அரிசி, அரிசி மாவு மற்றும் ரொட்டி ஆகியவை VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

மின்சாரம் மற்றும் மின்சார விநியோகம், கச்சா எண்ணெய், மண்ணெண்ணெய், அழகுசாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், மருந்துகள் ஆகியவற்றுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், செயற்கை உறுப்புகள் மற்றும் காது கேட்கும் கருவிகளுக்கும் VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறைக் கட்டணம் தவிர மருத்துவமனை பராமரிப்பு சேவைகள், இரசாயன உரங்கள் தவிர மற்ற உரங்கள் மற்றும் கைத்தறி ஜவுளிகளுக்கு VAT வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், டாக்சிகள் மற்றும் சுற்றுலா போக்குவரத்து வாகனங்கள் தவிர, பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் நிதி சேவைகள் ஆகியவையும் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular