2023ம் ஆண்டுக்கான வவுனியா பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் கலாநேத்திரா விருது தெரிவுகளில் துறைசார்ந்த நிபுணர்கள் இன்றி இடம்பெற்றுள்ளதாக கலைஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்கலாநேத்ரா விருதானது நாடக எழுத்துரு, கீழைத்தேச இசை, மேலைத்தேய இசை, பரதம், குறும்படம், ஊடகம், மரபு இசை உட்பட 18 துறைகளிற்கு இவ்விருது வழங்கப்பட்டவுள்ளது.
மேலும் இவ் 18 விருதுகளிற்கும் ஐந்து பேர் கொண்ட துறை சார்ந்த நிபுணர்களினால் மேற்கொள்ளப்படும் என இவ் விருதுகளிற்கான விண்ணப்பகோரலின் போது வவுனியா பிரதேச செயலாளர் நா. கமலதாசனால் அறிவிக்கப்பட்ட போதும் அவ்வாறு இடம்பெறவில்லை என்று கலைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்வாறான தெரிவிக்குழுவினால், திறமையான பல கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இது தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் கேட்ட போது,

தெரிவுக்குழுவில் துறைசார்ந்த யாரையும் நாம் தெரிவுசெய்வது இல்லை. ஓவ்வொரு துறைக்கும் தனி தனியாக நபர்கள் இல்லை என்றாலும் கலைத்துறையில் அனுபவம்வாய்ந்த நபர்களே உள்ளனர். மேலும் சான்றிதழ்களையும், விருதுகளையும் வைத்தே விருதுகள் வழங்கப்படுகின்றது என தெரிவித்தார்.