- Advertisement -
- Advertisement -
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் பின்னர், இன்று (11.12) மாலை பெறுதி சேர் வரிதிருத்த VAT (திருத்தம்) சட்டமூலத்தை விவாதிப்பதற்கான பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமானதும், சட்டமூலம் மீதான விவாதத்தை நடத்த எதிர்க்கட்சிகள் முன்வைத்த எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.
ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகிய நிலையில், ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -