விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தை பற்றி அழகாக எடுத்துரைக்கின்றனர். கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டி வருவதால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது என்று கூறலாம்.

இந்த சீரியலில் மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஹேமா. இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் இவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று கூறலாம்.
இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சீரியல் இன்னும் சரி நிஜத்திலும் சரி பார்க்க மிகவும் அழகாக இருந்து வருகிறார் மீனா.தனக்கென ஒரு youtube சேனல் தொடங்கி அதில் பல விஷயங்களை ஷேர் செய்து வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹேமா ராஜ்.இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். தற்பொழுது இப்புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் வைரலாக்கப்பட்டு வருகிறது.