Wednesday, April 2, 2025

நடிகர் இமான் அண்ணாச்சியின் அழகான குடும்ப புகைப்படங்கள்

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் இமான் அண்ணாச்சி .இவர் தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.அதை தொடர்ந்து ஆதித்யா டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குட்டீஸ் சுட்டிஸ்” என்ற குழந்தைகள் நிகழ்ச்சிகளில் பணியாற்றி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னையில் காதல்’என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் நீர்ப்பறவை, மரியான், நையாண்டி, கோலி சோடா, மெட்ராஸ், கயல் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் ஜில்லா, பூஜை, காக்கி சட்டை, புலி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 5’ போட்டியாளராக பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியின் தனது நகைச்சுவை உணர்வால் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து 70 வது நாள் வெளியேறினார். இவர் தமிழில் கமலி from நடுக்காவேரி, ஜாக் போர்ட், களவாணி 2, போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் இமான் அண்ணாச்சி தனது பள்ளி ஆசிரியர் பச்சை முத்து அவர்களின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு ஜெஃபி ஷைனி என்ற ஒரு மகளும் உள்ளார். தற்போது இவர் தன் மனைவி மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular