Tuesday, April 1, 2025

44 வயது நடிகையுடன் மீண்டும் ஜோடி சேரும் விஜய்..! செம குஷியில் ரசிகர்கள்

- Advertisement -
- Advertisement -

தளபதி விஜய் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தத் திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.இதில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பானது விறு விறுப்பான நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் 68ஆவது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குகிறார். இப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற 2024ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. தற்காலிகமாக இத் திரைப்படத்துக்கு தளபதி 68 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தளபதி 68 குறித்து பல தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதில் விஜயக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழ, நடிகை ஜோதிகா விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

விஜய் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த குஷி, திருமலை என இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது.இந்நிலையில் தளபதி 68இல் ஜோதிகா விஜயக்கு ஜோடியாக நடிப்பது அனைவரது எதிர்பார்ப்பதையும் அதிகரித்துள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular