Monday, March 17, 2025

கம்பஹாவில் கொள்ளையர்கள் கைவரிசை : பல இலட்சம் பெறுமதியான நகைகள் மாயம்!

- Advertisement -
- Advertisement -

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடமான நிலையமொன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 8.20 மணியளவில் மையத்தை திறக்கும் போது உள்ளே நுழைந்த இருவரால் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுமார் 175 இலட்சம் பெறுமதியான தங்கப் பொருட்களையும் 10 இலட்சம் முதல் 15 இலட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக அடகுக் கடையின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular