இயக்குனர் நெல்சனின் ஆஸ்த்தான நடிகராக முத்திரை குத்தப்பட்டவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நகைச்சுவையில் ஒரு காமெடி கிங்காக அறியபட்டார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். அவர் பேசும் விதமே அனைவரையும் கவர்ந்தது. அந்தளவுக்கு நடித்த ஒரு சில படங்களில் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகராக உருவெடுத்தார்.
இவர்கள் அனைவரும் தங்கள் உடல் மொழி மூலமும் தங்களுக்கான வசனங்களை தாங்களே எழுதிக் கொண்டு பேசுவது என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு பாணியை பின்பற்றியே பெரிய அளவில் நகைச்சுவை நடிகர்களாக நிலைத்திருக்க முடிந்தது.
ஆனால் ரெடின் கிங்ஸ்லி அவர்கள் எந்தவித பெரிய மெனக்கெடலும் இல்லாமல் தன்னுடைய டயலாக் டெலிவரி செய்யும் விதத்தில் வித்தியாசம் கட்டுவதன் மூலம் மட்டுமே இன்று முக்கிய நகைச்சுவை நடிகராக வளர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் இன்று ரெடின் கிங்ஸ்லியின் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்தது. அவர் சீரியல் நடிகை சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் திருமணம் ஒரு கோயிலில் நடந்திருப்பதாகவே தெரிகிறது.


