தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமா அளவில் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அதன் பிறகு காதலில் சிக்கிய இவர் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வந்தார்.

இதனிடையே இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருந்தாலும் அதனை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சுமார் ஏழு ஆண்டுகள் காதல் ஜோடியாக கோலிவுட் திரை உலகில் வலம் வந்தனர்.அதன் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.இவர்களின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார். அதேசமயம் இவர்களின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை netflix நிறுவனம் பெற்றது.
அதன் காரணமாக திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் நயன்தாரா மற்றும் விக்கி திருமணத்தில் கலந்து கொள்ள 200 பேருக்கு மட்டுமே அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா மற்றும் விக்கி தம்பதியினர் இரண்டு முறை ஹனிமூன் சென்று கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டனர். திருமணத்திற்கு பிறகு மீண்டும் திரையுலகில் நயன்தாரா கவனம் செலுத்தி வருகின்றார்.
அதேசமயம் திருமணம் முடிந்த நான்கு மாதத்தில் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோராக மாறிய தகவலையும் வெளியிட்டனர்.இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் சட்டப்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்தனர்.இதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது இருவரும் மகிழ்ச்சியாக தங்கள் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொண்டு இன்றுடன் ஒரு ஆண்டு முடிவடைந்த இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றனர்.இது குறித்து மிகவும் நெருக்கமாக இருக்கும் சில ரொமாண்டிக் புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றது.