Tuesday, March 18, 2025

IMF இன் இரண்டாவது கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

- Advertisement -
- Advertisement -

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் வசதியின் இரண்டாம் தவணைக்கான அனுமதி எதிர்வரும் இரண்டு நாட்களில் கிடைக்கப்பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டம் நாளை மறுதினம் (12.12)  நடைபெறவுள்ளதாகவும், அங்கு இலங்கையின் பிரேரணை பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மற்றும் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் வெற்றி பெற்றுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் தனது இரண்டாவது தவணையை வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து விடுபட்ட நாடாக பிரகடனப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular