Monday, April 7, 2025

காதல் கொண்டேன் திரைப்படத்தில் தனுஷுடன் நடித்த நடிகர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா..?

- Advertisement -
- Advertisement -

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்த சுதிப் சாரங்கி தற்போது எப்படி இருக்கிறார் என்று ஒரு புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.2003ஆம் ஆண்டு தனுஷ், சோனியா அகர்வால், சுதீப் சரங்கி போன்றோர் நடித்த திரைப்படம் தான் காதல் கொண்டேன் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தவர் தான் சுதீப் சாரங்கி.

இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதே அளவிற்கு இவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.சுதீப் சாரங்கி மாடலிங் துறையில் அதீத ஆர்வம் காட்ட அடுத்தவாய்ப்பாக நடிப்பில் களமிறங்கி பின் காதல் கொண்டேன் திரைப்படத்திற்கு பிறகு என்னவோ புடிச்சிருக்கு, காதலே ஜெயம், போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் நடித்த படங்கள் எதுவும் கைக் கொடுக்காத நிலையில் ரூட்டை மாற்றி பல மேடை நாடகங்களிலும் பெங்காலி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.சுதீப் சாரங்கிக்கு பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்ததால் ஹிந்தியில் முழு நேர சீரியல் நடிகராக நடித்து வந்தார்.

சுதீப், கால் டாக்ஸி டிரைவர் உடையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. அவர் அந்தப் புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். இந்தப் புகைப்படம் ஒரு விளம்பரம் ஒன்றிற்காக எடுக்கப்பட்டிருந்தால் இவரின் மாற்றம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular