இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே இவர் உருவாக்கினார்.பிக் பாஸ் முடிந்த பின் படங்களில் நடிக்க துவங்கிய லாஸ்லியா முதலில் Friendship எனும் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். பின், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

ஆனால், இந்த இரு திரைப்படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக அன்னபூரணி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.நடிகை லாஸ்லியா தனது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிவிட்டார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தாலே அது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரியும்.
இந்நிலையில், லாஸ்லியாவின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்த லாஸ்லியாவா இது, ஆள் அடையாளமே தெரியவில்லையே’ என கூறி வருகிறார்கள். அந்த அளவிற்கு தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார் லாஸ்லியா.இதோ அந்த புகைப்படம்