Friday, April 4, 2025

நடிகை தேவயானியின் அம்மா, அப்பாவை பார்த்திருக்கீங்களா..? இதோ பலரும் பார்த்திடாத அழகிய குடும்ப புகைப்படம்

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை தேவயானி. தல அஜித், தளபதி விஜய், பிரபு, விக்ரம், சரத்குமார், கமலஹாசன், பிரசாந்த் போன்றோருடன் ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை தேவயானி. இதைத்தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

நடிகை தேவயானி வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் கால்பதித்தார். இதில் மாபெரும் வெற்றி தொடராக அமைந்தது ‘கோலங்கள்’. இவர் பிரபல இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் தற்பொழுது ‘அனுகிரஹம்’ என்ற திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை தேவயானியின் தம்பி நகுலும் இயக்குனர் சங்கரின் ‘பாய்ஸ்’ படம் மூலம் அறிமுகமாகி காதலில் விழுந்தேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என பல முன்னணி படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவரும் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

தற்பொழுது நடிகை தேவயானி தனது அம்மா , அப்பா மற்றும் தம்பி நகுல் என குடும்பமாக எடுத்துக்கொண்ட அழகான குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இதோ அந்த புகைப்படம்

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular