Wednesday, April 2, 2025

நடிகர் விஷாலின் அண்ணி அவருடன் நடித்த இந்த நடிகையா..? வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படங்கள்..

- Advertisement -
- Advertisement -

தமிழ் திரை உலகில் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகர் விஷால். தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவிற்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக் கொண்டதால் இவர் தற்போது தனியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.இவர் முதலில் நடித்த செல்லமே திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது.அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்து பலரும் மிகப்பெரிய கமர்சியல் ஹீரோவாக வலம் வருவார் என்று கூறினர்.அதனைப் போலவே அவர் நடித்த தாமிரபரணி மற்றும் திமிரு உள்ளிட்ட அடுத்தடுத்து படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால் கடந்த சில வருடங்களாக சூப்பர் ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக் கொண்டிருக்கிறார்.இவர் நடிக்கும் எந்த ஒரு படமும் ரசிகர்களை தவறாததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்று உழைத்து வருகின்றார்.இவர் நடிப்பில் இறுதியாக வெளியான லத்தி திரைப்படமும் அவருக்கு மோசமான தோல்வியை கொடுத்தது. தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் விஷால் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் அவருடன் எஸ் ஜே சூர்யா மற்றும் சுனில் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.இதனிடையே விஷாலுக்கு ஒரு உடன் பிறந்த அண்ணனும் சகோதரியும் உள்ளன. விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு விஷாலுடன் திமிரு திரைப்படத்தில் இணைந்து நடித்த நடிகை ஸ்ரேயா ரெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு ஸ்ரேயா ரெட்டி இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்த நிலையில் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.தற்போது அவர் போட்டோ ஷூட் நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைப் போலவேவிஷாலின் தங்கை ஐஸ்வர்யாவுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் விஷாலின் அழகிய குடும்ப புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular