விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, 10 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சாவை கைப்பற்றியுள்ளது.
கடந்த நவம்பர் 14ஆம் திகதி பிற்பகல் 02.40 மணியளவில் டுபாயில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கனடாவில் இருந்து டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்ட இந்த போதைப்பொருள் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.
மேல்மாகாண புலனாய்வு தகவல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் உத்தியோகபூர்வ பொலிஸ் நாய்களை பயன்படுத்தி இந்த சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயணப் பொதிகளில் 19 கிலோ 588 கிராம் ‘குஷ்’ கஞ்சா இருந்ததாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.