Wednesday, April 2, 2025

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை….! இன்று 2 மணிக்கு பின் ஏற்படவுள்ள நிலைமை

- Advertisement -
- Advertisement -

“மிக்ஜாம்” சூறாவளியின் தாக்கம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது ​​குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தற்காலிக பலத்த காற்று

இந்நிலையில், மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் “மிக்ஜாம்” சூறாவளியானது இந்தியாவின் ஆந்திரா பகுதியில் கரையைக் கடந்த நிலையில் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular