விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நிஷா.

கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சி இவரை புகழின் உச்சத்திற்கே அழைத்துச்சென்றது. மேடையில் பிறரை கிண்டல் செய்து இவர் செய்யும் காமெடி, வசனங்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
இதனை தொடர்ந்து நிஷா சினிமாவிலும் களமிறங்கி சில படங்களில் காமெடியில் அசத்தியுள்ளார். பின்னர் அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
அவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத் திறமையால் அனைவரையும் அசர வைத்து வருகிறார்.
கடந்த சில தினங்களாகவே ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிக்ஜாம் புயல் புரட்டி போட்டு இருக்கிறது.இந்த புயல் வங்கக் கடலில் உருவாகி இருக்கிறது. இந்த மிக்ஸாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல இடங்களில் அதிகமான மழை பெய்து இருக்கிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மட்டும் இல்லாமல் சில தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை விடுத்திருக்கிறார்கள். பலருமே வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
பின் ஆங்காங்கே சிலர் உணவு, குடிக்க தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை அறந்தாங்கி நிஷா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram