Monday, March 31, 2025

யாழ் வாள்வெட்டு சம்பவம் : முல்லைத்தீவில் சிக்கிய முக்கிய ஆதாரம்!

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் பயணித்த வாகனம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.

இதில் வாள் வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞன் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், வன்முறையில் ஈடுபட்ட கும்பலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அதேவேளை குறித்த வன்முறை சம்பவமானது, யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் இரு வன்முறை கும்பலுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வரும் மோதல் சம்பவத்தின் தொடர்ச்சி என கூறப்படுகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular