Wednesday, April 2, 2025

வவுனியாவில் உழவியந்திரத்தின் கலப்பைக்குள் சிக்கிய மூன்றரை வயதுடைய சிறுவன் உயிரிழப்பு

- Advertisement -
- Advertisement -

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளான்.குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(04.12.2023) யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் உயிரிழப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில்,பனையாண்டான் நெடுங்கேணியினை சேர்ந்த மூன்றரை வயதுடைய சிவலோகநாதன் விந்துஜன் என்ற சிறுவன் கடந்த மாதம் 21ஆம் திகதி உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சென்று சிக்குப்பட்ட நிலையில் விபத்தினை சந்தித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதான வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular