- Advertisement -
- Advertisement -
நடிகர் மாதவனின் திரைப்பயணத்தில் தமிழில் அமைந்த ஹிட் படங்கள் சில உள்ளன, அதில் ஒன்று தான் ஜே ஜே. சரண் அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் பிரியங்கா கோதாரி.

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி வெளியான இப்படம் மூலம் பிரியங்காவிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவானது, ஆனால் அதன்பிறகு எந்த ஒரு படமும் அவர் நடிக்கவில்லை.2016ம் ஆண்டு பாஸ்கர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
பல வருடங்களுக்கு பிறகு பிரியங்காவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் பிரியங்காவா இது இப்படி குண்டாகி ஆளே மாறிவிட்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -