நடிகர் கிஷோர் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான “பொல்லாதவன்” என்ற திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார். ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டே “கன்டி” என்ற கன்னட திரைப்படத்தில் அறிமுகமாவிட்டார் கிஷோர். இத்திரைப்படத்திற்காக கிஷோர் கர்நாடக அரசின் சிறந்த துணைக்கதாப்பாத்திரத்திற்கான விருதை பெற்றார்.

அதனை தொடர்ந்து அவர் நடித்த இரண்டாவது திரைப்படமான “ராக்சஷா” திரைப்படத்திற்காகவும் கர்நாடக அரசின் விருதை பெற்றார். இவ்வாறு தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலத்திலேயே இரண்டு மாநில விருதுகளை பெற்றவர் கிஷோர்.
கர்நாடகாவின் சன்னப்பட்னா என்ற சிறிய ஊரில் பிறந்த கிஷோர், தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பெங்கலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் பட்டம் படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. எனினும் தனது மேற்படிப்பை முடித்த பிறகு அதே கல்லூரியில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கூட ரவிதாசன் கதாப்பாத்திரத்தில் மிரட்டி எடுத்திருந்தார் கிஷோர். தனது தனித்துவமான நடிப்பால் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்திருக்கும் கிஷோர்.
தனிப்பட்ட முறையில் கிஷோர் தனது கல்லூரி காதலியான விசாலாக்ஷியை மணந்து இரண்டு மகன்கள் உள்ளனர். கிஷோர் மற்றும் விசாலாக்ஷியின் பிரத்யேக வீடியோ நேர்காணலை கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்தோம், அது வைரலானது.
இப்போது தம்பதியினர் தங்கள் குழந்தைகளையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தியுள்ளனர் மற்றும் குடும்ப புகைப்படங்களை நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.