தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹன்சிகா. இதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகையாக உருவானார்.

இவரை குட்டி குஷ்பு எனவும் ரசிகர்கள் செல்லமாக அழைத்தனர். சமீபத்தில் இவர் தனது நீண்ட கால நண்பரான தொழிலதிபர் சோஹல் கதாரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமண வீடியோ நல்ல வரவேற்பை பெற்று குறிப்பிடத்தக்கது. நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கிய தரும் கதாபாத்திரங்களில் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் மை நேம் சுருதி, 105 மினிட்ஸ், கார்டியன் ஆகிய திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது இவர் முதல் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.