சன்டிவியில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் “எதிர்நீச்சல்”. ஆணாதிக்க மனப்பான்மை கொண்ட ஆதி குணசேகரனை, அவ்வீட்டின் மருமகள் எவ்வாறு சமாளித்து வாழ்கின்றனர் என்பதே இத்தொடரின் கதை.

ஆணாதிக்கம் மற்றும் பிற்போக்குத்தன்மை கொண்டவர் ஆதி குணசேகரன். இவர் அவரது மனைவி உட்பட அவ்வீட்டின் மருமகள் அனைவரையும் அடக்கி வைப்பதும், அவர்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பி தங்கள் உரிமையைக் காக்கப் போராடுவதும் தொடர்கதையாகி உள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் 3 மருமகளில் ஒருவரான ஜனனி கேரக்டரில் நடிப்பவர் மதுமிதா. புடவை அணிந்து ஹோம்லியான புதுமைப்பெண்ணாக தொடரில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.
இந்த நிலையில் ஜனனி அதாவது மதுமிதா மற்றும் வைஷ்ணவி இருவரும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கின்றனர். அங்கு தாங்கள் சாப்பிட்ட ஹோட்டல் மற்றும் விளையாடிய கடற்கரை புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
View this post on Instagram