Tuesday, April 1, 2025

வருங்கால கணவருடன் குத்தாட்டம் போடும் ரோபோ சங்கரின் மகள்..! காட்டு தீயாய் பரவும் வீடியோ

- Advertisement -
- Advertisement -

வருங்கால கணவருடன் இந்திரஜா ரோபோ சங்கர் ரீல்ஸ் செய்து கலக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் பிகில் மற்றும் விருமன் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் இந்திரஜா ரோபோ சங்கர்.
இவரின் யதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இதனை தொடர்ந்து இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தினரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் அண்மையில் உடல் மெலிந்த நிலையில் ரோபோ சங்கர் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ரோபோ சங்கரை பற்றி ரசிகர்கள் அதிகம் தேட ஆரம்பித்து விட்டார்கள்.

சமீபத்தில் ரோபோ சங்கர் குடும்பத்துடன் குல தெய்வ கோயிலுக்கு சென்றுள்ளார்கள்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள்,“ இந்திரஜாவிற்கு கல்யாணமா? என கேள்வியெழுப்பியுள்ளார்கள்.

அதற்கு இந்திரஜா,“ ஆமாம் ஆனால் திகதி இன்னும் முடிவு செய்யவில்லை..” என பதிலளித்துள்ளார்.இந்த நிலையில் இந்திரஜா அவருடைய வருங்கால கணவருடன் இணைந்து ரீல்ஸ் செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular