தமிழ் சினிமாவில் இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களில் சிபிராஜும் ஒருவர். இவர் பிரபல நடிகர் சத்யராஜின் மகன் என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

என்னதான் சினிமா பிரபலத்தின் வாரிசாக இருந்தாலும், தனித்துவமான கதைகளை தேர்வு செய்து சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் சிபிராஜ்.
அதனை தொடர்ந்து சிபிராஜ் தனது தந்தையுடன் சேர்ந்து ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
பின்னர் பட்டாசு, நாணயம்,நாய்கள் ஜாக்கிரதை, போக்கிரி ராஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது தந்தையைப் போலவே அவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிபிராஜின் மனைவி ரேவதி இவர்களுக்கு தீரன் என்ற மகன் உள்ளார்.
தற்போது சிபிராஜ் சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டியுள்ளார். மேலும் குடும்பத்துடன் வீட்டிற்கு கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.