- Advertisement -
- Advertisement -
போலி விசாரவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட இரு பெண்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவரும், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமானப் போக்குவரத்து அனுமதிக்காக அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகம் அடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள் இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் போலியான விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்தது தெரியவந்துள்ளது. அதற்கமைய கைது செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
- Advertisement -