பிக்பாஸ் சீசன்- 7 நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து பரபரப்பாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த சீசனின் தொடக்கத்திலிருந்து பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்து வருகிறது.

ஆனால், தற்போது இந்த பிக்பாஸ் வீட்டில் ரசிகர்களை எரிச்சலடைய செய்யும் பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருகிறது. அதனை இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் மற்றும் பிக்பாஸ் உள்ளிட்டோர் பெரிதாக கண்டு கொண்டது போல தெரியவில்லை.
கமல்ஹாசன் அவ்வப்போது விதிமீறல் தொடர்பாக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிவிப்பார். அதிலும் சென்ற வாரம் பூர்ணிமா மற்றும் மாயா உள்ளிட்ட இருவரும் மைக்கை கழற்றி வைத்துவிட்டு ரகசியம் பேசுவதை அவர் கடுமையாக ஆட்சேபித்திருந்தார்.
ஆனாலும் அவர்கள் இருவருமே கமல்ஹாசனின் இந்த அறிவுறுத்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கமல்ஹாசன் எவ்வளவு தான் சொன்னாலும் நாங்கள் கேட்க மாட்டோம் அதைத்தான் செய்வோம் என்று விடாப்பிடியாக மீண்டும், மீண்டும் இருவரும் ஒரே தவறை செய்து வருகிறார்கள். இவர்கள் இருவர் மட்டும் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு வருவது ரசிகர்களை கோபமுற வைத்திருக்கிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது பிக் பாஸ் போட்டியாளர்களின் வயது விவரங்கள் வெளியாகி உள்ளது.
- கூல் சுரேஷ் – வயது 45
- விஷ்ணு – வயது 35
- சரவணன் விக்ரம் – வயது 28
- வினுஷா – வயது 24
- அக்ஷயா – வயது 23
- ரவீனா – வயது 19
- அனன்யா – வயது 25
- ஐஷு – வயது 21
- பூர்ணிமா- வயது 28
- பிரதீப் ஆண்டனி – வயது 38
- விசித்ரா – வயது 50
- ஜோவிகா – வயது 18
- மாயா – வயது 32
- மணி – வயது 29
- யுகேந்திரன் – வயது 46