தமிழ் சினிமாவில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான நிலவே மலரே என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரஹ்மான். அதனைத் தொடர்ந்து அவர் புது புது அர்த்தங்கள், சங்கமம் போன்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் ரஹ்மான் தற்போது வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் நடித்த துருவங்கள் பதினாறு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் 1984ஆம் ஆண்டு ‘கூடவிடே’ என்கிற மலையாள படதின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் நடித்தற்காக கேரள அரசின் சிறந்த நடிகர் விருதினை பெற்றார்.
அதன்பின்னர் 1984ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 16 மலையாள படங்களில் நடித்து அசத்தினார். அதன் பின்னர் தமிழ், தெழுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அண்மையில் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.