Wednesday, April 2, 2025

வவுனியாவில் தனது மகளை 02 வருடங்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை கைது!

- Advertisement -
- Advertisement -

சுமார் 02 வருடங்களாக தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வவுனியா பாம்பமேடு 17வது காலாட்படை முகாமில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த  46 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சுமார் 02 வருடங்களாக 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக கொழும்பு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்திருந்தது.

இந்த தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கொபேகனே பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், விசாரணைகளின் ஊடாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக கூறப்படும் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular