Wednesday, April 2, 2025

நடிகை சினேகாவின் அண்ணனை பார்த்து இருக்கீங்களா…? இவர் கலா மாஸ்டரின் முன்னாள் கணவராம்..!

- Advertisement -
- Advertisement -

நடிகை சினேகாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில் அவரின் அண்ணன் ஒருவரின் புகைப்படமும் அதிகம் வைரலாகி வருகிறது ஏன் தெரியுமா?முதன் முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பிறகு தமிழில் மாஸ் காட்டிய நடிகைதான் சினேகா.

தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் அறிமுகமானார் ஆனால் அந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் போகாததால் தெலுங்கு படங்களில் நடிக்க சென்றார்.பின்னர் விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்து அனைவருக்கும் பிடித்தமான நடிகையாக மாறிவிட்டார். அதன்பின்னர் அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வெற்றியைப் பெற ஆரம்பித்தது. இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருந்தார்.

அதனால் அவரை இன்னும் புன்னகை அரசி என்ற பெயரையும் வாங்கி விட்டார்.பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா. இப்படப்பிடிப்பில் இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களாகினர். இந்த நட்புநாளடைவில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் மேல் காதல் மலர்ந்துள்ளது.

இரு வீட்டாரிடமும் சம்மதம் கேட்டு காத்திருந்து திருமணம் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு விஹான் மகனும் ஆதியன்தா மகளும் இருக்கிறார்கள்.அவ்வப்போது கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சினேகா. தற்போது குடும்பத்தோடு இருக்கும் புகைப்படம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

சினேகாவிற்கு மொத்தம் 2 அண்ணன்களும் 1 அக்காவும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் திருமணம் செய்து பிள்ளைகளுடனும் குடும்பத்துடனும் இருக்கும் இருக்கிறார்கள்.இதில் ஒரு அண்ணன் கோவிந்தராஜன் என்பவர் கலா மாஸ்டரின் முன்னாள் கணவன் ஆவார். இவர்கள் இருவரும் திருமணம் 1997ஆம் ஆண்டு திருமணம் செய்து 1999ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்திருக்கிறார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular