பிரபல சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் சின்னத்திரை சீரியல் மற்றும் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதேபோல் இவர் சில நேரங்களில் பரபரப்பான மற்றும் அதிரடியான கருத்துக்களை கூறி விமர்சனத்துக்குள்ளாகி வருவார்.

சமீபத்தில் நடிகர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தில் ரேகா நாயர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்படி ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக படித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் மேலாடையின்றி அரைநிர்வாணமாக நடித்தற்கு விமர்சனமும் எழுந்தது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ரேகா நாயர், நடிகர் மன்சூர் அலிகான் செய்த செயலுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அந்த மாதிரி நடந்து கொள்ளுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
ஆடை பற்றி நான் பேசிய கருத்து வேறு, நான் சின்னதான ஆடை அணிவது என்னுடைய விருப்பம்.
அப்படிப்பட்ட ஆடை அணிந்து வெளியில் செல்லும் போது ஒருவன் என்னுடைய தொடையை தொட்டால், நான் உடனே அவனுடைய கழுத்தை பிடிப்பேன் அதுதான் பெண் சுதந்திரம். உடம்பில் துணி இல்லாமல் வெளியில் செல்வது பெண் சுதந்திரம் கிடையாது என்று ரேகா நாயர் கூறியுள்ளார்.