Tuesday, April 1, 2025

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்கவில்லை!

- Advertisement -
- Advertisement -

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களுக்கு சில அரச அதிகாரிகள் ஆதரவளிக்கவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக அரசாங்கம் பல்வேறு தீர்மானங்களை எடுத்தாலும் இதுவரையில் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் போது, ​​அவர்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. தடையாக இருந்தது.

சில அதிகாரிகளுடன் சண்டையிட்டு, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய வங்கியுடன் பேசி, அமைச்சரவையின் ஒப்புதலை பெற்று, குறைந்த வட்டியில், 5 பில்லியனை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இருப்பினும்  திறைசேரி, மத்திய வங்கி மற்றும் வங்கிகள் இன்னும் குறைந்த வட்டியில் எங்கள் தொழிலாளர்களுக்கு கடனை வழங்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular