Tuesday, April 1, 2025

பண்டிகை காலத்தில் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க விசேட வேலைத்திட்டம்!

- Advertisement -
- Advertisement -

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் பொருட்களை தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு வெளியிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

புதிய வேலைத்திட்டத்தை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல தெரிவித்தார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட சீனியை அதிகபட்ச சில்லறை விலையான 275 ரூபாவுக்கு 25 சென்ட் வரியில் நுகர்வோருக்கு பல்பொருள் அங்காடிகளிலும், பல்பொருள் அங்காடிகள் ஊடாகவும் விற்பனை செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular