Tuesday, April 1, 2025

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் யானையின் சடலம் மீட்பு!

- Advertisement -
- Advertisement -

வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் யானை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காணியொன்றில் இன்று (27) யானையின் சடலம் இருப்பதை காணியின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மற்றும் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

மேலும் குறித்த யானை மூன்று நாட்களிற்கு முன்பாகவே உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் சம்பவம் தொடர்பில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular