Monday, March 31, 2025

வவுனியாவில் சுகாதார பரிசோதகரின் வீட்டில் திருட முற்பட்டவர் பிடிபட்டார்!

- Advertisement -
- Advertisement -

வவுனியாவில் சுகாதாரபரிசோதகரின்  வீட்டினுள் நுழைந்து திருட முற்றப்பட்ட நபர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா தாண்டிக்குளம் சோயாவீதி பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழையமுற்பபட்டதை வீட்டின் உரிமையாளரான சுகாதார பரிசோதகர் அவதானித்துள்ளார்.

இதனையடுத்து சுதாகரித்துக்கொண்ட சுகாதார பரிசோதகரும் அவரது குடும்பத்தினரும், திருடனை மடக்கிப்பிடித்து மரத்துடன் கட்டிவைத்து நையப்புடைத்துள்ளனர்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதுடன், திருடனை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த சம்பவத்தில் திருடன் கத்தியால் தாக்கியதில் சுகாதாரபரிசோதகருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், அவரது சகோதரரான ஊடகவியலாளர் ஒருவருக்கும் சிறுகாயம் ஏற்ப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்டட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular