Tuesday, April 1, 2025

யாழ் – வல்வெட்டி துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

- Advertisement -
- Advertisement -

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந்து மாவீரர்களாக உயிர்நீத்தவர்களுக்கு இதன்போது அஞ்சலிக்கப்பட்டது.

இதன்போது மாவீரர் பண்டிதரின் தாயார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் க.சதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular