- Advertisement -
வவுனியா ஹோரவப்போத்தானை வீதி நகர பள்ளிவாசலுக்கு முன்பாக நேற்று (24.11.2023) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற லோறி – துவிச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
வவுனியா நகரிலிருந்து ஹோரவப்போத்தானை வீதியுடாக பயணித்த லோறி வாகனமும் அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியும் நகர பள்ளிவாயிலை அண்மித்த பகுதியில் மோதுண்டு விபத்துக்குள்ளானது

இவ்விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வவுனியா நெடுங்குளம் பகுதியினை சேர்ந்த 71வயதுடைய குப்புரே கேதர முத்துவண்டா என்பரே உயிரிழந்தவராவார்.
விபத்துச்சம்பவம் தொடர்பில் லொறி சாரதியினை கைது செய்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
- Advertisement -