Thursday, April 3, 2025

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்.!

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர்.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி நிகழ்ச்சியின் இறுதிவரை சென்றார். தற்போது வெள்ளித்திரையில் நடிகராக களமிறங்கியுள்ள சாண்டி மாஸ்டர்,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்தில் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. தொடர்ந்து சாண்டி கன்னட இயக்குனர் ஷூன்யா இயக்கத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் இப்படத்திற்கு ரோசி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் சாண்டி ‘ஆண்டாள்’ என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இவர் மக்களின் மனதினை கவர்ந்திருந்தார்.தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular