விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ராஜு.திருநெல்வேலியை சேர்ந்த இவர் இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார்.
அதில் கதாநாயகன் கவினின் தோழனாக நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு பாராட்டுகள் குவிந்தன.இதனைத் தொடர்ந்து ஆண்டாள் அழகர் சீரியலில் இவர் நடித்தார். அதன் பிறகு சின்னத்திரை தாண்டி வெள்ளித் துறையிலும் நடிக்க தொடங்கினார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சமீபத்தில் விஜய் டிவியில் முடிவுக்கு வந்த நாமிருவர் நமக்கிருவர் என்ற சீரியலிலும் மாயனின் நண்பனாக கதிரேசன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.இவர் சினிமா நடிகர், உதவி இயக்குனர் மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் என்று பல்வேறு முகங்களை கொண்டிருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நன்றாக விளையாடிய இவருக்கு ரசிகர்கள் பேராதரவு தெரிவித்தனர்.இறுதியாக இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்றினார். தற்போது பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ராஜு கடந்த 2020 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் தோழியான தாரிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிக் பாஸ் ராஜுவின் அழகிய திருமண புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.