Tuesday, April 1, 2025

ஹீரோவாக அடியெடுத்து வைக்கும் விஜய் சேதுபதி மகன்..! இயக்குனர் யார் தெரியுமா.? வெளியான புகைப்படங்கள்.!

- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடிக்கும் ஒரு நட்சத்திரம் தான் விஜய் சேதுபதி. குணச்சித்திர நடிகராக தனது கெரியரை தொடங்கி,

அதன் பின் ஹீரோ அவதாரம் எடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் வில்லனாக நடித்து வெளியாகி ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அவருடைய மகன் படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் ‘Phoenix வீழான்’ எனும் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி முதன் முதலில் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் விஜய் சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தான் அவருக்கு அறிமுக திரைப்படமாகும்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் மீண்டும் தனது தந்தையின் சிந்துபாத் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சூர்யா சேதுபதி தற்போது புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகும் ‘Pheonix வீழான்’ எனும் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மேலும் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது.

- Advertisement -
RELATED ARTICLES

Most Popular